Advertisement

சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி?

By: Monisha Wed, 26 Aug 2020 5:09:57 PM

சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி?

இஞ்சியை துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். சுவையான இஞ்சி துவையல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்!

தேவையான பொருட்கள்
இஞ்சி – 1/2 கப் நறுக்கியது
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
கறிவேப்பிலை – தேவையான அளவு
புளி – ஒரு கோலி அளவு
வெல்லம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடுகு – சிறிதளவு

ginger,taste,recipe,lentils,tamarind ,இஞ்சி,துவையல்,சுவை,கடலை பருப்பு,புளி

செய்முறை
இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான இஞ்சி சட்னி தயார்.

Tags :
|
|
|