Advertisement

சுவையான பாஸ்தா செய்வது எப்படி?

By: Monisha Mon, 17 Aug 2020 2:56:35 PM

சுவையான பாஸ்தா செய்வது எப்படி?

அனைவருக்கும் பிடித்த சுவையான பாஸ்தா ரெம்ப சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாஸ்தா – 2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 2 பல்
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 2
தக்காளி -4
கேரட் – 1/2 கப்
குடை மிளகாய் – 1/4 கப்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

pasta,carrots,onions,tomatoes,garlic ,பாஸ்தா,கேரட்,வெங்காயம்,தக்காளி,பூண்டு

செய்முறை
முதலில் ஒரு கடாயில் தண்ணீரை சுட வைத்து அது நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து அதனுடன் பாஸ்தா சேர்த்து 10 நிமிடம் வரை வேக வைக்கவும். பிறகு அதனை தனியாக எடுத்து வடிகட்டி எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நசுக்கிகிய பூண்டு, இஞ்சி சேர்த்து கூடவே வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து மூடி நன்றாக வேகவைத்து கொள்ளவும். இவையனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் நாம் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறி 5 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பாஸ்தா தயார்.

Tags :
|
|