Advertisement

அருமையான சுவையில் தக்காளி சூப் தயாரிக்கும் முறை

By: Nagaraj Sun, 12 June 2022 00:01:08 AM

அருமையான சுவையில் தக்காளி சூப் தயாரிக்கும் முறை

சென்னை: உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் தக்காளி சூப்பை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

tomatoes,garlic,onion,pepper,salt ,தக்காளி, பூண்டு, வெங்காயம், மிளகுத்தூள், உப்பு

செய்முறை: வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும். பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

Tags :
|
|
|