Advertisement

அசத்தலான சுவையில் வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?

By: Monisha Thu, 24 Dec 2020 10:02:26 AM

அசத்தலான சுவையில் வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்வது எப்படி?

வெந்தயக்கீரை வைத்து சுவையான மசாலா சப்பாத்தி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 11/2 கப்
வெந்தயக் கீரை - 1/2 கப்
தயிர் - 1/4 கப்
தண்ணீர் - சுமார் 1/2 கப்
மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன்
தனியாத் தூள் -1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
சீரகம், ஓமம் - 1டீஸ்பூன் (வறுத்து பொடித்தது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்

wheat,olive oil,yogurt,dill,spicy chapati ,கோதுமை,ஆலிவ் ஆயில்,தயிர்,வெந்தயக் கீரை,மசாலா சப்பாத்தி

செய்முறை
முதலில் கீரையை அலசி கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீரை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை வெந்ததும், கோதுமை மாவுடன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

மேலும், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு அளவிற்கு பிசைந்து சுமார் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் சிறிய துண்டுகளாக எடுத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு விரித்து, தவாவில் வெண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். சுவையான வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி தயார்.

Tags :
|
|
|