Advertisement

குழந்தைகளுக்கு பிடித்த அருமையான தூத்பேடா ஈஸியாக செய்யலாம்!

By: Monisha Sat, 04 July 2020 4:24:20 PM

குழந்தைகளுக்கு பிடித்த அருமையான தூத்பேடா ஈஸியாக செய்யலாம்!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்து கொடுங்கள்!

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
பட்டர் – 2 ஸ்பூன்
சீனி – 1 கப்
கார்ன் ஃப்ளார் – 11/2 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா பருப்பு – 25
பாதாம் பருப்பு – 10

children,dood beda,dessert,recipe ,குழந்தைகள்,தூத்பேடா,இனிப்பு,ரெசிபி

செய்முறை
பிஸ்தா பருப்பை தின் ஸ்லைசுகளாக துருவிக் கொள்ளவும். பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் நன்கு கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பைக் குறைத்து வைக்கவும். பால் முழுவதும் சுண்டி ஏடு வர ஆரம்பிக்கும் சமயம் சீனியைப் போடவும்.

சீனி கரைந்ததும் கார்ன் ஃப்ளாரைப் போட்டு நன்கு கிளறவும். நன்கு கெட்டியான பதம் வரும் போது பட்டரை போட்டு அடுப்பிலிருந்து இறக்கி உருண்டைகள் பிடித்து அதன் மேல் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பை தூவினால் அருமையான தூத்பேடா தயார்.

Tags :