Advertisement

சத்துக்கள் நிறைந்த டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க!

By: Monisha Tue, 23 June 2020 12:13:42 PM

சத்துக்கள் நிறைந்த டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க!

டிராகன் பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சத்து நிறைந்த இந்த பழத்தை ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அப்படியே கிடைக்கும். எனவே, டிராகன் பழ ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
டிராகன் பழம் – 2
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு

dragon fruit juice,honey,lemon juice,ice cube ,டிராகன் ஃப்ரூட் ஜூஸ்,தேன்,எலுமிச்சை சாறு,ஐஸ் கட்டி

செய்முறை
டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃப்ரூட் ஜூஸ் ரெடி!

Tags :
|