Advertisement

முருங்கை மசாலா செய்வது எப்படி ?

By: Karunakaran Wed, 02 Dec 2020 4:04:49 PM

முருங்கை மசாலா செய்வது எப்படி ?

முருங்கைக்காயில் இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
முருங்கை மசாலா செய்ய தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் - 4
சின்ன வெங்காயம் - 10
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு.


drumstick spice,kootu,curry,iron ,முருங்கைக்காய் மசாலா, கூட்டு , கறி, இரும்பு சத்து

செய்முறை :

முதலில் முருங்கைக்காயை துண்டு துண்டாக வெட்டி கொள்ள வேண்டும். பின் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிக்க வேண்டும்.

பின் நறுக்கிய முருங்கைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு ஆகியவை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கினால் 20 நிமிடத்தில் சுவையான காரசாரமான முருங்கை மசாலா தயார். சின்ன வெங்காயம் சேர்ப்பதால் முருங்கை மசாலா சுவையாக இருக்க உதவும்.


Tags :
|
|