Advertisement

அட்டகாசமான டயட் கேக் செய்வது எப்படி?

By: Monisha Tue, 22 Sept 2020 09:46:30 AM

அட்டகாசமான டயட் கேக் செய்வது எப்படி?

கேக் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது ஆனால் இதில் கலோரிகள் அதிகம். இன்று நாம் டயட் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
கோதுமை மாவு - 1/2கப்
ராகி மாவு - 1/4கப்
கொள்ளு மாவு - 1/4கப்
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 5 தேக்கரண்டி
முட்டை - 1வெள்ளை கரு மட்டும்
வெண்ணிலா எசென்ஸ் - 1தேக்கரண்டி
கெலாக்ஸ் - 3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

wheat flour,eggs,vanilla essence,sugar,baking powder ,கோதுமை மாவு,முட்டை,வெண்ணிலா எசென்ஸ்,சர்க்கரை,பேக்கிங் பவுடர்

செய்முறை
முதலில் எல்லா மாவுகளையும் சலித்துக் கொள்ளவும். அதன் பின் மாவில் உப்பு,பேக்கிங் பவுடர், கெலாக்ஸ் எல்லாவற்றையும் போட்டு நன்கு கலக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு, எண்ணை, சீனி எல்லாவற்றையும் நன்கு கலக்கவும். பின் அதில் மாவு கலவையினை சேர்த்து கலக்கி பின் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு கலந்ததும் கேக் ட்ரேயில் எண்ணை தடவி அதில் கேக் கலவை ஊற்றவும். அதன் மேல் சிறிது கெலாக்ஸை தூவி 250 டிகிரி சூட்டில் 25 நிமிடத்திற்கு பிறகு பேக் செய்யவும்.

Tags :
|
|