Advertisement

அருமையான சீஸ் வெஜிடபிள் ஆம்லெட் எப்படி செய்வது?

By: Monisha Sat, 11 July 2020 5:08:03 PM

அருமையான சீஸ் வெஜிடபிள் ஆம்லெட் எப்படி செய்வது?

குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸ் வெஜிடபிள் சேர்த்து அருமையான ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 3,
குடைமிளகாய் - 1,
முட்டைகோஸ் - 100 கிராம், (விருப்பப்பட்டால்)
கேரட் - கால் கப்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 3,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
சீஸ் - ஒரு சிறு கட்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
உப்பு - சுவைக்கேற்ப.

cheese,vegetable,omelet,delicious,egg ,சீஸ்,வெஜிடபிள்,ஆம்லெட்,சுவை,முட்டை

செய்முறை
கேரட், முட்டை கோஸ், ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை துருவிக்கொள்ளவும். முட்டையை நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள். காய்கறிக் கலவையுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்துவைத்துக்கொள்ளுங்கள்.

அடித்து வைத்திருக்கும் முட்டையில், நறுக்கிய காய்கறிகளைக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, முட்டை, காய்கறிக் கலவையை சிறு அடைகளாக ஊற்றி, மேலே துருவிய சீஸைப் பரவலாகத் தூவி, வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிடுங்கள். விருப்பப்பட்டால், மிளகுதூள் தூவிப் பரிமாறலாம். சூடாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Tags :
|
|