Advertisement

காலா ஜாமூன் வீட்டிலேயே செய்வது எப்படி ?

By: Karunakaran Wed, 11 Nov 2020 6:17:10 PM

காலா ஜாமூன் வீட்டிலேயே செய்வது எப்படி ?

தீபாவளிக்கு வித விதமான பலகாரங்கள் செய்வது வழக்கம். பெரும் பாலும், கடைகளில் கிடைக்கும் சில இனிப்பு வகைகளை எப்படி செய்வது என்று பலருக்கும் தெரியாது. இதில் காலா ஜாமூன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளிய முறையில் காலா ஜாமூனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
இனிப்பில்லாத கோவா - 1/4 கிலோ,
சர்க்கரை - 750 கிராம்,
மைதா - 60 கிராம்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
ஏலக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
ஜாதிக்காய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்.

gala jamun,diwali,sweet,palcova ,காலா ஜமுன், தீபாவளி, இனிப்பு, பால்கோவா

செய்முறை :

முதலில் சர்க்கரையில் 600 மி.லி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஜீரா காய்த்து வைக்கவும். 1/2 மணி நேரம் ஜீரா (பாகை) ஆற வைக்க வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் பால்கோவா, சோடா, மைதாவை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொஞ்சம் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

5 நிமிடம் கழித்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து வைக்க வேண்டும்.
பின்னர், கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.
பின் வறுத்த உருண்டைகளை சூடாக இருக்கும் ஜீராவில் சேர்த்து ஊறவைக்க சுவையான காலா ஜாமூன் தயார்.

Tags :
|
|