Advertisement

செரிமான சக்தியை தூண்டி ஆரோக்கியத்தை உயர்த்தும் பூண்டு சாதம் செய்யும் விதம்!!!

By: Nagaraj Tue, 17 Oct 2023 06:49:26 AM

செரிமான சக்தியை தூண்டி ஆரோக்கியத்தை உயர்த்தும் பூண்டு சாதம் செய்யும் விதம்!!!

சென்னை: பூண்டு செரிமான சக்தியை தூண்டுவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய மகத்துவமான பூண்டில் ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பூண்டு – 3 (பெரியது)பாசுமதி அரிசி - 2 கப்பச்சை மிளகாய் - 5மல்லி - 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்பிரியாணி இலை - 1சோம்பு - 1/2 டீஸ்பூன்முந்திரி - 10வேர்க்கடலை - 10நெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுமிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்

garlic rice,health,aniseed,biryani leaves,peanuts ,பூண்டு சாதம், ஆரோக்கியம், சோம்பு, பிரியாணி இலை, வேர்க்கடலை

செய்முறை: பாசுமதி அரிசியை நீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.அடுத்து சீரகம் மற்றும் மல்லியை தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் குக்கரில் நெய் ஊற்றி முந்திரி, வேர்க்கடலை போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுத்து சோம்பு, பிரியாணி இலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

அதனுடன் அரைத்த பேஸ்ட் சேர்த்து தட்டி வைத்த பூண்டு, உப்பு, முந்திரி, வேர்க்கடலை மற்றும் அரிசியைக் கழுவிப் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்கினால் பூண்டு சாதம் ரெடி!!!

Tags :
|