Advertisement

உடல் எடையை குறைக்க உதவும் நெல்லிக்காய் டீ!

By: Monisha Sat, 18 July 2020 3:58:39 PM

உடல் எடையை குறைக்க உதவும் நெல்லிக்காய் டீ!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காய் டீயை பருகலாம். இன்று நாம் நெல்லிக்காய் டீயை தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

gooseberry tea,ginger,pepper powder,lemon,honey ,நெல்லிக்காய் டீ,இஞ்சி,மிளகு தூள்,எலுமிச்சை,தேன்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

குறிப்பு: நெல்லிக்காய் பொடிக்கு பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.

Tags :
|
|