Advertisement

சத்து நிறைந்த சிறுதானிய சப்பாத்தி செய்வது எப்படி?

By: Monisha Mon, 17 Aug 2020 3:03:21 PM

சத்து நிறைந்த சிறுதானிய சப்பாத்தி செய்வது எப்படி?

சிறுதானியங்களின் அருமை தெரிந்திருந்தாலும், எப்படி அவற்றை சமையலில் பயன்படுத்துவது என்பது நம்மில் பலபேருக்குத் தெரிவதில்லை. வழக்கமாகச் செய்வதைப்போலவே சிறுதானியங்களிலும் இடியாப்பம், உப்புமா, சப்பாத்தில என பல உணவுகளைத் தயாரிக்கலாம். சரி, சப்பாத்தி செய்வது எப்படி? பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
தினை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள். சத்தான தினை மற்றும் கோதுமை மாவு இணைந்த சப்பாத்தி தயார்!

சருமத்திற்கு புத்துணர்ச்சி தரும் தயிர் ஃபேஸ் பேக்!

wheat flour,roti,grain,health,taste ,கோதுமை மாவு,சப்பாத்தி,தானியம்,ஆரோக்கியம்,சுவை

புளித்த தயிரை முகத்தில் தடவிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கும், இறந்த செல்களை அகற்றுவதற்கும் தயிர் உதவுகிறது.

இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தயிர் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகப்பருக்கள், தோல் சுருக்கங்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். தயிர் உணவுக்கு மட்டுமல்ல பல வகையான சருமப் பிரச்னைகளுக்கும் உதவக் கூடியது. அந்த வகையில் தயிர் பயன்படுத்தி ஃபேஸ் பேக் அப்ளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1 ஸ்பூன் தயிர், 1 சிறிய வாழைப்பழம், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் என மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

Tags :
|
|
|