Advertisement

ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் டீ எப்படி செய்வது?

By: Monisha Fri, 17 July 2020 5:05:27 PM

ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் டீ எப்படி செய்வது?

ஆப்பிள் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிள் முக்கியமாக ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். இன்று நாம் அதிக ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1
நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்
லவங்கப்பட்டை - 1
கிராம்பு - 2
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை
ஆப்பிள் பழத்தை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் போதுமான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அடுத்து அதில் சிறிதளவு லவங்கப்பட்டை கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தது இறக்கி வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

குறிப்பு: நாட்டு சர்க்கரை பிடிக்காதவர்கள் தேன் கலந்தும் பருகலாம்.

Tags :
|
|
|