Advertisement

ஆரோக்கியம் நிறைந்த உலர் பழ ஜாம் செய்வது எப்படி?

By: Monisha Wed, 19 Aug 2020 1:52:58 PM

ஆரோக்கியம் நிறைந்த உலர் பழ ஜாம் செய்வது எப்படி?

வீட்டிலேயே சுவையான ஆரோக்கியம் நிறைந்த உலர் பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
ப்ரூன்ஸ் - 5
விதை நீக்கிய பேரீச்சை - 4
கருப்பு உலர்திராட்சை - 2 மேசைக்கரண்டி
அப்ரிகாட் - 5

செய்முறை
ஒரு கப் தண்ணீரில் இவற்றை எல்லாவற்றையும் போடவும்.10-15 நிமிடங்கள் வரை மூடிபோட்டு வேகவிடவும். பின்னர் ஆறவிடவும். மிக்சியில் போட்டு மையாக அரைத்துக்கொள்ளவும். அரைத்தவற்றைக் கண்ணாடி பாத்திரத்தில் போட்டு சேமிக்கவும். உலர் பழ ஜாம் தயார்.

health,dried fruit,jam,dates,children ,ஆரோக்கியம்,உலர் பழம்,ஜாம்,பேரீச்சை,குழந்தைகள்

குறிப்பு
- 8+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- பிரெட்டில் தடவி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- சப்பாத்தியின் மேல் தடவி தரலாம்.
- தோசையில் ஜாமை பரப்பி நட்ஸ் பவுடர் தூவி தரலாம்.
- ஸ்மூத்தியில் கலந்து கொடுக்கலாம்.
- 6 வாரம் வரை பயன்படுத்தலாம்.
- ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துங்கள்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

Tags :
|
|
|