Advertisement

ஆரோக்கியம் நிறைந்த எள்ளு உருண்டையை எளிதில் செய்வது எப்படி?

By: Nagaraj Sun, 13 Aug 2023 6:59:00 PM

ஆரோக்கியம் நிறைந்த எள்ளு உருண்டையை எளிதில் செய்வது எப்படி?

சென்னை: சத்தான சுவையான எள்ளு உருண்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க. இது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும்.

தேவையான பொருட்கள்:
வெள்ளை எள் – 3 கப்சர்க்கரை – 2 கப்ஏலக்காய் – 6நெய் – சிறிதளவு

cardamom,ghee,sesame seeds,sugar,water, ,எள், ஏலக்காய், சர்க்கரை, தண்ணீர், நெய்

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும் .பின் வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும்.

பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும் .சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும் .

Tags :
|
|
|