Advertisement

ஆரோக்கியமான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி?

By: Monisha Sat, 05 Sept 2020 12:01:46 PM

ஆரோக்கியமான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி?

வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை உணவாக தருவது அவசியம். இன்று நாம் ஆரோக்கியமான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி என்றுபார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த பாசுமதி அரிசி - 1 கப்
தக்காளி - 1
தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
முட்டை - 3
பூண்டு - 10 பல்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
வினிகர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

health,tomatoes,eggs,garlic,egg rice ,ஆரோக்கியம்,தக்காளி,முட்டை,சாதம்பூண்டு

செய்முறை
முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தாள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு கிளறி விட வேண்டும். பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். பின் அந்த சாதத்தை நன்றாக கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி.

Tags :
|
|
|