Advertisement

பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் மூலிகை சூப் தயாரிப்பது எப்படி?

By: Monisha Wed, 23 Sept 2020 3:08:05 PM

பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் மூலிகை சூப் தயாரிப்பது எப்படி?

மூலிகை சூப் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை கட்டுப்படுத்தும். இன்று நாம் மூலிகை சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சீரகம் 1/2 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பட்டை சிறிதளவு
வெள்ளை பூண்டு 10 பற்கள்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
தனியா சிறிதளவு
கிராம்பு 7
தண்ணீர் 750 மி.லி
உப்பு தேவையான அளவு

சூப் செய்முறை
ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 தேக்கரண்டி சீரகத்தையும், மிளகையும், 1 தேக்கரண்டி மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.

herbal soup,diseases,ginger,garlic,cumin ,மூலிகை சூப்,நோய்கள்,இஞ்சி,பூண்டு,சீரகம்

ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 மி.லி., தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.

குறிப்பு: பிரஷர் குக்கர் பயன்படுத்வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 மி.லி.,க்கு பதில் 1250 மி.லி.,தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.

Tags :
|
|