Advertisement

சுவையான ஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி??

By: Monisha Tue, 30 June 2020 3:24:51 PM

சுவையான ஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி??

வீட்டில் வாரத்திற்கு ஒரு முறை வித்தியாசமான உணவு வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு சமைத்து கொடுங்கள். சரி வாங்க சுவையான ஜவ்வரிசி போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி – ஒரு கிண்ணம்.,
உருளைக்கிழங்கு – 2 எண்ணம் (Nos).,
பச்சை மிளகாய் – 5 எண்ணம் (Nos).,
கேரட் மற்றும் கோஸ் – ஒரு கைப்பிடி.,
புதினா மற்றும் கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
எண்ணெய் மற்றும் உப்பு – தே.அளவு.

javvarisi bonda,potatoes,green chillies,carrots ,ஜவ்வரிசி போண்டா,உருளைக்கிழங்கு,பச்சை மிளகாய்,கேரட்

செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து., மசித்து தனியாக எடுத்துக்கொள்ளவும். இஞ்சி, கேரட் மற்றும் கோஸை சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும். ஜவ்வரிசியை 5 மணிநேரம் நீரில் ஊற வைத்து, அதற்கு அடுத்தபடியாக எடுத்துக்கொண்ட உருளைக்கிழங்கு, கேரட், கோஸ், பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பின்னர் சிறுசிறு உருண்டைகளாக பிடித்துக்கொண்டு எண்ணெய் சூடானது., உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்து எடுத்தால் சூடான சுவையான ஜவ்வரிசி போண்டா ரெடி!

Tags :