Advertisement

குளுகுளு கிவி ஐஸ்க்ரீம் எளிய முறையில் செய்யலாம்!

By: Monisha Wed, 24 June 2020 3:08:00 PM

குளுகுளு கிவி ஐஸ்க்ரீம் எளிய முறையில் செய்யலாம்!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக கிவி ஐஸ்க்ரீமை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கிவி பழம் (நறுக்கியது) ஒரு கப்,
பைனாப்பிள் ஜூஸ் – 2 கப்,
சர்க்கரை அரை கப்.

kiwi ice cream,kids,pineapple juice,sugar ,கிவி ஐஸ்க்ரீம்,குழந்தைகள்,பைனாப்பிள் ஜூஸ்,சர்க்கரை

செய்முறை
அரை கப் கிவி பழத்தை நன்றாக கூழாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் பைனாப்பிள் ஜூஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். கலக்கிய ஜூஸை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழ்பதம் வரும் வரை கைவிடாமல் கிளறவும். கூழ்பதம் வந்தவுடன் இறக்கி ஆற விடவும்.

ஆறியதும் மீதமுள்ள கிவி பழத்துண்டுகளை சேர்த்து, நன்றாக கலந்து சிறிய கப்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணி நேரம் (ஃப்ரீசரில்) வைக்கவும். குளுகுளு கிவி ஐஸ்க்ரீம் ரெடி.

Tags :
|