Advertisement

அனைவரும் விரும்பும் சுவையான கொத்து பரோட்டா!

By: Monisha Wed, 09 Sept 2020 3:21:30 PM

அனைவரும் விரும்பும் சுவையான கொத்து பரோட்டா!

குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய கொத்து பரோட்டா. இன்று நாம் சுவையான கொத்து பரோட்டா வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
20 மி லி சமையல் எண்ணெய்
2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 பச்சை மிளகாய் (நறுக்கியது)
3 - 4 கறி வேப்பிலைகள்
75 கி வெங்காயம், (நறுக்கியது)
1/2 கப் வறுத்த தேங்காய்
2 பரோட்டா, கைகளால் பிய்த்துக்கொள்ளுங்கள்.
5 கிராம் மிளகாய் தூள், கரம் மசாலா தூள்
1 எலுமிச்சை சாறு
1 முட்டை
1 கட்டு கொத்தமல்லி, நறுக்கியது

kothu parotta,onion,eggs,chillies,ginger ,பரோட்டா,வெங்காயம்,முட்டை,மிளகாய்,இஞ்சி

செய்முறை
பாத்திரத்தில் சமையல் எண்ணெயை சூடாக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறி வேப்பிலை சேர்த்து மூன்று நிமிடங்கள் வதக்கவும். துருவிய தேங்காயைச் சேர்த்து, வேகும் வரை வதக்கவும்

மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சுவைக்கேற்ப உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் நறுக்கி வைத்த பரோட்டாக்களைச் சேர்த்து, நன்கு கலக்கவும். முட்டையை நன்கு கலக்கி இதில் ஊற்றி கிளறவும். அடுப்பில் இருந்து எடுத்து சூடாகப் பரிமாறவும், நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

Tags :
|
|