Advertisement

வீட்டிலே செய்யலாம் சுவை மிகுந்த குல்பி ஐஸ்கிரீம்!

By: Monisha Wed, 17 June 2020 3:50:53 PM

வீட்டிலே செய்யலாம் சுவை மிகுந்த குல்பி ஐஸ்கிரீம்!

பாதாம் கலந்த குல்பி ஐஸ்கிரீம் ஒரு சிறந்த இந்திய இனிப்பாகும். இதை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள் நண்பர்களே!

தேவையான பொருட்கள்பால்ஏலக்காய்
சர்க்கரை
பாதாம்

செய்முறை
ஒரு கனமான கடாயில் 2 லிட்டர் பாலை கொதிக்கவிடவும்.பாலை பொங்கி வரும் போது, அடுப்பை குறைத்து விட்டு, மாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சிக் கொள்ளவும். இதில் 10 ஏலக்காய் சேர்க்கவும். பாலை அதன் மூன்றில் ஒரு பங்காக குறைக்க வேண்டும். எனவே இதை அடிக்கடி கிளறவும்.

kulfi ice cream,milk,cardamom,sugar,almonds ,குல்பி ஐஸ்கிரீம்,பால்,ஏலக்காய்,சர்க்கரை,பாதாம்

பால் மேலே பொங்கி வரும் போதெல்லாம் அதை கிளறி விட வேண்டும். ஏலக்காய் மற்றும் 5 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 10 பாதாம் பருப்பு சேர்க்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான தீயில் இதை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். ஒரு கிண்ணத்தில் இந்த‌ பாலை ஊற்றி முற்றிலும் ஆற‌ விடவும். சில உப்பில்லாத நறுக்கிய பிஸ்தா சேர்த்து கிளறவும்.

இதை மூடி பிரீசரில் வைக்க வேண்டும்.15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஐஸ் கட்டி போல ஆகாமல் இருக்க கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். இது கலக்க‌ கடினமாகும் போது, 6 சிறிய கப் அல்லது தயிர் கப்களில் பிரித்து வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து இந்த கப்பில் இருந்து எடுத்து பரிமாறவும்.

Tags :
|
|