Advertisement

சுவை நிறைந்த லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி ?

By: Monisha Sat, 13 June 2020 1:47:45 PM

சுவை நிறைந்த லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி ?

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

என்னென்ன தேவை?

எலுமிச்சைச்சாறு – 1/2 கப்,
தண்ணீர் – 1 கப்,
சர்க்கரை – 3/4 கப்,
புதினா சாறு – 1 டீஸ்பூன்.

ice cream,lemon shot popsicle,lemon juice,water,mint juice ,ஐஸ்கிரீம்,லெமன் ஷாட் பாப்சிகிள்,எலுமிச்சைச்சாறு,தண்ணீர்,புதினா சாறு

எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீருடன், 3/4 கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இதனுடன் புதினா சாறு சேர்க்கவும். பின்பு ஆற விடவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து வடிகட்டி எடுக்கவும். இதை பாப்சிகிள் மோல்டில் ஊற்றி 3-4 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். லெமன் ஷாட் பாப்சிகிள் ரெடி!

Tags :
|