Advertisement

பருப்பு சிறுகீரை கிச்சடி செய்வது எப்படி ?

By: Karunakaran Thu, 17 Dec 2020 11:54:03 AM

பருப்பு சிறுகீரை கிச்சடி செய்வது எப்படி ?

கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி ஆரோக்கியம் நிறைந்தது. இது கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் இரண்டையும் உள்ளடக்கியது.

தேவையான பொருட்கள் :

சிறுகீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
தக்காளி - 2
அரிசி - 1 1/2 கப்
பருப்பு- 1 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 5-6
நெய் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்

lentil spinach,kichadi,dal,veg recipe ,பயறு கீரை, கிச்சடி, பருப்பு, வெஜ் ரெசிபி

செய்முறை :

முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பின் அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளவேண்டும். அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அனைத்து நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பருப்பு கீரை கிச்சடி தயார்.

Tags :
|