Advertisement

உடலுக்கு உடனடி சக்தி தரும் மால்ட் புட்டிங் செய்வது எப்படி?

By: Monisha Wed, 17 June 2020 3:50:45 PM

உடலுக்கு உடனடி சக்தி தரும் மால்ட் புட்டிங் செய்வது எப்படி?

உடலுக்கு உடனடி சக்தி தரும் மால்ட் புட்டிங்கில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்து ஆகிய அனைத்தும் உள்ளது. இதனால் முழு உணவை உண்ட திருப்தி கிடைக்கிறது. இத்தகைய ஒரு ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்
கலவை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியாகக் கரைத்த வெல்லம் அல்லது பனைவெல்லம் – 2 டீ ஸ்பூன்
நெய் – 2 டீ ஸ்பூன்
மஞ்சள் வாழைப்பழம் – 1 அல்லது முட்டை 1
ஏலப்பொடி – 1 சிட்டிகை

malt pudding,carbohydrates,protein,lipids,recipe ,மால்ட் புட்டிங்,கார்போஹைட்ரேட்,புரோட்டீன்,கொழுப்புச் சத்து,ரெசிபி

செய்முறை
அதிகம் பழுக்காத வாழைப்பழத்தை வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கவும். மாவைத் திட்டமாக நீர் சேர்த்துக் கெட்டியான கரைசலாக்கவும். ஒரு கப் தண்­ணீரைக் கொதிக்கவிடவும். அதில் வெல்லக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அத்துடன் மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.

கெட்டியாகும்போது பாதி நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். வெந்த பக்குவத்தில் மீதி நெய்யை விட்டுக் கிளறவும். இறக்கிய உடன் அகலமான தட்டில் கொட்டி அதன் மீது வாழைப்பழத் துண்டங்களை வைத்து உடனடியாக மூடி வைக்கவும். முட்டை சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் ஸ்லைஸ் செய்து அந்த வில்லைகளை வாழைப்பழத் துண்டங்களுக்குப் பதிலாக வைத்து அலங்கரிக்கலாம்.

அல்லது ஒரு வாழைப்பழத் துண்டம் மற்றும் ஒரு முட்டை ஸ்லைஸ் என்றும் அலங்கரிக்கலாம். ஆறிய பிறகு நல்ல மணத்துடன் சுவையான சத்துமிக்க இனிப்பு தயார்!

Tags :
|