Advertisement

சூப்பரா சுவையில் மேங்கோ குல்ஃபி செய்து அசத்துங்க!

By: Monisha Fri, 19 June 2020 5:10:41 PM

சூப்பரா சுவையில் மேங்கோ குல்ஃபி செய்து அசத்துங்க!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக மேங்கோ குல்ஃபி செய்து பாருங்கள்.

என்னென்ன தேவை?
பால் – 500 மில்லி
சர்க்கரை – 3/4 கப்
சோளமாவு – 2 தேக்கரண்டி
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
பழுத்த மாம்பழம் – 1.5 கப்
மேங்கோ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி

ice cream,mango kulfi,cornmeal,saffron,milk ,ஐஸ்கிரீம்,மேங்கோ குல்ஃபி,சோளமாவு,குங்குமப்பூ,பால்

எப்படிச் செய்வது?
ஒரு ஜாரில் பழுத்த மாம்பழம் எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் சோள மாவு எடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை எடுத்து பால் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விடவும். பின் சோள மாவு சேர்த்து ஒரு கொதி வரும் வரை கிண்டவும். இப்போது அடுப்பை அணைத்து ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டு கலந்து ஆறவிடவும்.

அரைத்த வைத்த மாம்பழம், மேங்கோ எசன்ஸ் சிறிது சேர்த்து அச்சுகளில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். சுவையான மேங்கோ குல்ஃபி தயார்!

Tags :