Advertisement

அட்டகாசமான மாங்காய்த் துருவல் ஊறுகாய் ஈஸியா செய்யலாம்!

By: Monisha Tue, 28 July 2020 6:08:08 PM

அட்டகாசமான மாங்காய்த் துருவல் ஊறுகாய் ஈஸியா செய்யலாம்!

இன்று நாம் மாங்காய்த் துருவல் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்

தேவையான பொருட்கள்
மாங்காய்த் துருவல் - ஒரு கப்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
வறுத்துப் பொடி செய்த மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

mango,pickles,rice,dosa,chapati ,மாங்காய்,ஊறுகாய்,சாதம்,தோசை,சப்பாத்தி

செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, மாங்காய்த் துருவலை சேர்த்து 3 நிமிடம் கிளறவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, வறுத்து அரைத்த மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறி இறக்கவும். சூப்பரான மாங்காய்த் துருவல் ஊறுகாய் ரெடி.

குறிப்பு: இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

Tags :
|
|
|