Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாட்டுகோழி ரசம் செய்வது எப்படி?

By: Nagaraj Wed, 18 Oct 2023 6:21:19 PM

உடலுக்கு ஆரோக்கியம் தரும் நாட்டுகோழி ரசம் செய்வது எப்படி?

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் நாட்டுகோழி ரசம் செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்
நாட்டு கோழி – அரை கிலோசின்ன வெங்காயம் – 15சீரகம் – 1 ஸ்பூன்மிளகு – 2 ஸ்பூன்பச்சை மிளகாய் – 1தக்காளி – 2இஞ்சி பூண்டு – பேஸ்ட் -2 ஸ்பூன்பட்டை, லவங்கம் – தலா 1மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்தனியாத்தூள் – 1 ஸ்பூன்மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்கருவேப்பிலை , மல்லி இலை – தேவையான அளவுஉப்பு, எண்ணெய் – தேவையான அளவு

pepper,cumin,ginger,garlic paste,chicken curry,taniyat powder ,மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, கோழிக்கறி, தனியாத்தூள்

செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

பொடித்த மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக விடவும். இறக்கி வைத்து கருவேப்பிலை, மல்லி இலை தூவி பரிமாறவும். நாட்டு கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம்.

Tags :
|
|
|