Advertisement

சூப்பரான நியூட்டெலா ஐஸ்க்ரீம் செய்து சுவைத்து மகிழுங்கள்!

By: Monisha Thu, 18 June 2020 4:27:39 PM

சூப்பரான நியூட்டெலா ஐஸ்க்ரீம் செய்து சுவைத்து மகிழுங்கள்!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு புது விதமாக நியூட்டெலா ஐஸ்க்ரீம் செய்து பாருங்கள்.

என்னென்ன தேவை?
நியூட்டெலா சாக்லெட் – 1 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
பால் – 1 கப்,
கோகோ பவுடர் – 3 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்.

nutella ice cream,fresh cream,milk,cocoa powder,sugar ,நியூட்டெலா ஐஸ்க்ரீம்,ஃப்ரெஷ் க்ரீம்,பால்,கோகோ பவுடர்,சர்க்கரை

எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் பால், கோகோ பவுடர், நியூட்டெலா சாக்லெட் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நன்கு ஸ்பூனால் கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். சுவையான நியூட்டெலா ஐஸ்க்ரீம் ரெடி!

Tags :
|