Advertisement

ரெம்ப சுலபமாக செய்யலாம் நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்..!

By: Monisha Fri, 12 June 2020 3:38:27 PM

ரெம்ப சுலபமாக செய்யலாம் நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்..!

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம்.

என்னென்ன தேவை?
நியூடெல்லா – 3/4 கப்,
பால் – 1 கப்,
ஹெவி கிரீம் – 1/2 கப்,
ஸ்வீட்அண்டு கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்.

ஹெவி கிரீம் செய்ய
பால் – 3/4 கப்,
வெண்ணெய் – 1/4 கப்.

nutella milk popsicles,milk,heavy cream,butter ,நியூடெல்லா மில்க் பாப்சிகல்ஸ்,பால்,ஹெவி கிரீம்,வெண்ணெய்

எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தை சூடு செய்து வெண்ணெயை உருக்கி ஆற விடவும். இத்துடன் பால் சேர்த்து ஹான்டு பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். சேகரித்த பால் ஆடைகளை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ஹெவி கிரீம் தயார்.

நியூடெல்லா, பால், ஹெவி கிரீம், கன்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். இந்த கலவையை குல்பி அச்சில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து பரிமாறவும்.

Tags :
|