Advertisement

அரிசி ரவாயில் சத்தான கொத்தமல்லி உருண்டை செய்யும் விதம்

By: Nagaraj Mon, 14 Sept 2020 08:37:40 AM

அரிசி ரவாயில் சத்தான கொத்தமல்லி உருண்டை செய்யும் விதம்

ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வீட்டிலேயே விதவிதமாக தயாரித்து ருசிக்கலாம். இன்று அரிசி ரவாயில் சத்தான கொத்தமல்லி உருண்டை டிபன் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள் :

அரிசி ரவா - 1 கப்
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - கால் கப்
புளி - நெல்லிக்காய் அளவு
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு -1 டீஸ்பூன் வீதம்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

coriander,dumplings,eggplant,rice semolina ,கொத்தமல்லி, உருண்டை, பெருங்காயத்தூள், அரிசி ரவா

செய்முறை: ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், கொத்தமல்லி தழை, தேங்காய் துருவல், புளி ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுதை கொட்டவும்.

அதுபோல் நெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க தொடங்கியதும் சிறு தீயில் வைத்து அரிசி ரவாவை கொட்டி லேசாக கிளறி, கால் மணி நேரம் மூடி வைத்து வேகவிட்டு இறக்கவும்.

ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவி ஏற்றி ருசிக்கலாம். சூப்பரான கொத்தமல்லி கார உருண்டை ரெடி. ஆரோக்கியம் நிறைந்த டிபன்.

Tags :