Advertisement

சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?

By: Monisha Mon, 24 Aug 2020 4:54:13 PM

சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?

குழந்தைக்கு 6-வது மாதம் தொடங்கி விட்டதா? உங்கள் குழந்தை திட உணவுக்குத் தயாராகிவிட்டது. வீட்டிலே உங்கள் கையால் தயாரித்த, சுத்தமான ஹோம் மேட் செர்லாக் பவுடரை உங்கள் குழந்தைக்கு நீங்கள் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க பெற்று ஆரோக்கியமாக வளருவார்கள்.

தேவையானவை
அரிசி – 50 கிராம்
துவரம் பருப்பு – 10 கிராம்
பச்சைப் பயறு – 10 கிராம்
பாசி பருப்பு – 10 கிராம்
உலர்ந்த பட்டாணி – 10 கிராம்
கொண்டைக்கடலை – 10 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி

kids,homemade,cherlac powder,nutrition,health ,குழந்தைகள்,ஹோம் மேட்,செர்லாக் பவுடர்,ஊட்டச்சத்து,ஆரோக்கியம்

செய்முறை
கொண்டைக்கடலை மற்றும் சீரகத்தை தவிர, மற்ற அனைத்தையும் தனி தனியாக நன்றாக கழுவி தூசி, கல் ஆகியவற்றை நீக்கி கொள்ள வேண்டும். நன்றாக தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள். சுத்தமான வெள்ளைத் துண்டில் இவற்றைப் பரப்பி தனி தனியாக மேற்சொன்ன பொருட்களைக் காய வைக்கவும். கழுவியவற்றை நன்றாக 3-4 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்க வேண்டும். நன்றாக வெயிலில் உலர்த்தப்பட்ட பொருட்களை ஒவ்வொரு பொருளாக அரிசி, துவரம் பருப்பு என அனைத்தையும் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்படியே வறுத்துக் கொள்ளுங்கள். தீய விடாமல் வறுக்க வேண்டும். அருகிலே நின்று கவனமாக வறுக்கவும்.

அரிசியை வறுக்கும்போது அவை லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். பருப்புகளை வறுக்கும்போது, லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். இப்போது கொண்டைக்கடலை, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளுங்கள்.இதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். காற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து வைக்கலாம்.

Tags :
|