Advertisement

ஓட்ஸ் மசாலா அடை செய்வது எப்படி ?

By: Karunakaran Tue, 08 Dec 2020 6:17:02 PM

ஓட்ஸ் மசாலா அடை செய்வது எப்படி ?

ஓட்ஸ் கொண்டு பல வகையான ஹெல்தி உணவுகளை சமைக்கலாம். அந்த வகையில் அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஓட்ஸ் மசாலா அடை செய்ய தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்
வெள்ளரிக்காய் - சிறியது ஒன்று
குடை மிளகாய் - 1
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 7
சீரகம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 துண்டு
தக்காளி - 1/2 பாதி
கேரட் - 1
ஓமம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகுப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


oatmeal spice,adai,veg recipe,healthy food ,ஓட்ஸ் மசாலா, அடை, வெஜ் ரெசிபி, ஆரோக்கியமான உணவு

செய்முறை :

முதலில் ஓட்ஸை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸ் ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அரைத்த விழுதை சேர்த்துக்கொள்ள வேண்டும். குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் குடை மிளகாய், பச்சை மிளகாய், சீரகம், ஓமம், இஞ்சி, கொத்தமல்லி, வெள்ளரிக்காய், குடைமிளகாய், கேரட், சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு, காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அடுத்ததாக மாவை அடை போல் தட்டி எடுத்து தோசைக்கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்க ஓட்ஸ் மசாலா அடை தயார்.


Tags :
|