Advertisement

பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி ?

By: Karunakaran Mon, 14 Dec 2020 3:39:25 PM

பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி ?

பன்னீரில் கிரேவி, பிரை, புலாவ் என பல வகைகளை சமைக்கலாம். இப்பொழுது ஹோட்டல் ஸ்டைலில் எப்படி பன்னீர் ஸ்டப்ஃடு தோசை செய்வதை பார்க்கலாம்...

தேவையான பொருள்கள் :
தோசை மாவு - 2 கப்
பன்னீர் - ஒரு கப்
வெங்காயம் - 2
எண்ணெய்-தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்

மசாலா பொருள்கள் :
தனியா தூள்- 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா- 2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள்- 2 ஸ்பூன்

panneer,stuffed dosa,veg recipes,dosa recipes ,பன்னீர், ஸ்டஃப் செய்யப்பட்ட தோசை, வெஜ் ரெசிபிகள், தோசை ரெசிபிகள்


செய்முறை :

முதலில் பன்னீரை துருவி அல்லது சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவேண்டும்.

பிறகு அதில் பன்னீர், தனியா தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் ஆகியவை சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். கடைசியில் கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் மசாலா தயார். இப்போது, அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி அதன் மேல் பன்னீர் கிரேவி வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக மாறியவுடன் தோசையை ரோல் செய்வது போல் செய்தால் சுவையான பன்னீர் ஸ்டப்ஃடு தோசை தயார்

Tags :