Advertisement

உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி ?

By: Karunakaran Wed, 09 Dec 2020 5:44:22 PM

உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி ?

உருளைக்கிழங்கில் எளிமையான முறையில் வீட்டிலேயே உருளைக்கிழங்கு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
பால் - 1 டம்ளர்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க :

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பால் - 4 டேபிள் ஸ்பூன்

potato soup,veg recipe,soup recipe,maida ,உருளைக்கிழங்கு சூப், வெஜ் ரெசிபி, சூப் ரெசிபி, மைடா

செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கு, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வேகவைக்க வேண்டும். பிறகு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

இதனிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் மைதா மாவு, பால், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்து, அதை அடுப்பில் உள்ள உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்க வேண்டும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து கெட்டியான பிறகு கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாற சுவையான உருளைக்கிழங்கு சூப் தயார்.


Tags :