Advertisement

சுடசுட ராகி பக்கோடா செய்வது எப்படி?

By: Monisha Mon, 05 Oct 2020 2:04:20 PM

சுடசுட ராகி பக்கோடா செய்வது எப்படி?

ஒரு அழகிய மாலை நேரத்தில் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ராகி பக்கோடா செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்

தேவையான பொருட்கள்
ராகி மாவு 1 கப்
வெங்காயம் 1
பொட்டுக்கடலை மாவு 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 3
பெருங்காயம் தூள் 1 சிட்டிகை
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு

ragi pakoda,onion,curry leaves,health,taste ,ராகி பக்கோடா,வெங்காயம்,கருவேப்பிலை,ஆரோக்கியம்,சுவை

செய்முறை
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் உப்பு, பெருங்காய தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்பு ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். பின்பு அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொறித்து எடுத்தால் சுவையான ராகி பக்கோடா தயார். இவற்றை அனைவருக்கும் சுடசுட பரிமாறவும்.

Tags :
|
|