Advertisement

ரிச்சான ரெசிபி சாக்லேட் பால்ஸ் செய்வது எப்படி ?

By: Monisha Tue, 14 June 2022 3:30:01 PM

ரிச்சான ரெசிபி சாக்லேட் பால்ஸ் செய்வது எப்படி ?

சாக்லேட் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள் :
கோகோ பவுடர் - 25 கிராம்கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்பட்டர் - ஒரு ஸ்பூன்உப்பு - சிறிதுசாக்லேட் பால்களை உருட்ட தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன்பருப்பு துகள்கள் சாக்லேட் மற்றும் கலர் ஸ்பிரிங்கில்ஸ்

chocolate-truffles,chocolate-balls,fudge-balls,candy,sweet ,சாக்லேட்-ட்ரஃபிள்ஸ், சாக்லேட்-பால்ஸ், ஃபட்ஜ்-பால்ஸ், மிட்டாய், இனிப்பு

செய்முறை : முதலில் ஒரு பிளேட்டில் சிறிது வெண்ணெய்யை தடவி வைக்க வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், வெண்ணெய், உப்பு, கோகோ பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து சூடுபடுத்த வேண்டும். மிதமான தீயில் கலவையைக் கலந்து பாகும் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டு நிமிடத்தில் கலவை கட்டியானதும் வெண்ணெய் பூசப்பட்ட தட்டில் மேல் ஊற்ற வேண்டும். சிறிது ஆற வைத்து இந்த பிளேடை பிரிட்ஜில் வைக்க வேண்டும். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து கையில் வெண்ணெயை தடவி இந்த சாக்லேட் கலவையை உருண்டைகளாக உருட்டி ஸ்ப்ரிங்கில்ஸ், பருப்பு துகள்கள் மீது உருட்டி எடுத்தால் சுவையான சாக்லேட்ஃபட்ஜ் பால்ஸ் தயார்.

Tags :
|