Advertisement

காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி

By: vaithegi Sat, 23 Sept 2023 4:45:12 PM

காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி

நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. ஆனால் இப்போது காய்கறி ஏந்தும் இன்றி சாம்பார் பற்றி பார்ப்போம்

தேவையானவை பொருட்கள் :

பருப்பு – 2 கப்
கடுகு – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 2
வரமிளகாய் – 4
தக்காளி – 4
சீரகம் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
கொத்தமல்லி
கறிவேப்பிலை
உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பருப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து குக்கரில் வைத்து நன்கு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

sambar,vegetable ,சாம்பார் ,காய்கறி


பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம் போன்றவற்றை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவித்து வைத்து உள்ள பருப்பு அதனுள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். நன்கு கொதித்த பின் அதனை இறக்கி கொத்தமல்லி தலையை தூவி பரிமாறலாம். இப்போது சுவையான சாம்பார் தயார்.

நாம் தினமும் பலவகையான காய்கறிகளை சேர்த்து சாம்பார் செய்யலாம். ஆனால் ,காய்கறிகளே இல்லாமல் இந்த சாம்பார் மிக சுவையாக இருப்பதுடன், மிகவும் குறைந்த நேரத்திலேயே இந்த சாம்பாரை தயார் செய்துவிடலாம்.

Tags :
|