Advertisement

சோயா பீன்ஸ் சூப் செய்வது எப்படி ?

By: Karunakaran Fri, 13 Nov 2020 1:35:15 PM

சோயா பீன்ஸ் சூப் செய்வது எப்படி ?

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை தினமும் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் சோயா பீன்ஸ் சூப் செய்வதை அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
சோயா பீன்ஸ் - 50 கிராம்,
மஞ்சள் தூள் - சிறிதளவு ,
கேரட் - 1,
மிளகுதூள் - சிறிதளவு ,
தக்காளி - சிறிதளவு,
உப்பு - தேவைக்கு,
சிறிய வெங்காயம் - ஒரு கைப்பிடி,
கிராம்பு - 2,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு ,
பட்டை, பூண்டு, தண்ணீர் - தேவைக்கு

soya,bean,soup,vegtable soup ,சோயா, பீன், சூப், காய்கறி சூப்

செய்முறை :

முதலிலே சோயா பீன்சை தண்ணீரில் ஊறவையுங்கள். தக்காளி, வெங்காயம், கேரட், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் தண்ணீர்விட்டு தக்காளி, கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கிப் போட்டு, பட்டை, கிராம்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் கலந்து மிதமான சூட்டில் 2 விசிலுக்கு வைக்க வேண்டும்.

பின்னர் சோயா பீன்சையும் குக்கரில் சேர்த்து வேகவிடுங்கள். வெந்ததும் இறக்கி நன்றாக மசித்து வடிகட்ட வேண்டும். பின்பு இது 300 மி.லி. அளவு வரும்வரை சூடாக்கி வற்றவைக்க வேண்டும். பின்பு போதுமான உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பருக வேண்டும். காரத்திற்கு மிளகுதூள் கலந்து சூடாக பருகலாம். சூப்பை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகிவிடும். அதனால் பாத்திரத்தை மூடி வைத்து தயார் செய்யவேண்டும் அல்லது குக்கரை பயன் படுத்தலாம்

Tags :
|
|
|