Advertisement

காரசாரமான மிளகாய் பஜ்ஜி எப்படி செய்வது?

By: Monisha Sat, 11 July 2020 5:07:29 PM

காரசாரமான மிளகாய் பஜ்ஜி எப்படி செய்வது?

தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற உணவுகளில் பஜ்ஜியும் ஒன்று. மாலை நேரங்களில் மிளகாயில் பஜ்ஜி செய்து சாப்பிட்டால், ரெம்ப சுவையாக காரசாரமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை மாவு - 1 கப்
பஜ்ஜி மிளகாய் - 10
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப
உப்பு, மஞ்சள், பெருங்காயம் - தேவையான அளவு

spicy,chilli bajji,rice flour,flavoring,south india ,காரம்,மிளகாய் பஜ்ஜி,அரிசி மாவு,சுவை,தென்னிந்தியா

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கொண்டை கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவை கலக்கிக் கொள்ளுங்கள். பஜ்ஜி மிளகாயை கீறி அதற்குள் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ஸ்டஃப் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய பஜ்ஜி நல்ல சுவையுடனும், காரசாரமானதாகவும் இருக்கும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஸ்டஃப் செய்துள்ள மிளகாயை, கரைத்து வைத்துள்ள மாவில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பஜ்ஜி மிளகாய் தயார்.

Tags :
|