Advertisement

மிளகில் காரசாரமான சட்னி செய்வது எப்படி?

By: Monisha Fri, 11 Dec 2020 11:49:56 AM

மிளகில் காரசாரமான சட்னி செய்வது எப்படி?

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மிளகில் காரசாரமான சட்னி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
பெரிய பழுத்த தக்காளி – 3
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
வெந்தயம் – 1 சிட்டிகை
சீரகம் – 1 சிட்டிகை
தேங்காய்த் துருவல் – 1 கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம்

pepper,tomato,cumin,coconut,sesame oil ,மிளகு,தக்காளி,சீரகம்,தேங்காய்,நல்லெண்ணெய்

செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஆறவிடவும். அதே கடாயில், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை வதக்கவேண்டும். தக்காளி தொக்கு பதத்துக்கு வந்தவுடன் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

தக்காளி தொக்கு நன்கு ஆறியபிறகு, அதனோடு ஏற்கெனவே வறுத்து வைத்திருந்த பொருள்கள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் பதத்தில் இந்த சட்னி இருந்தால் சுவையாக இருக்காது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு இந்த கலவையோடு, எண்ணெய்யில் தாளித்த கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிப்பைச் சேர்த்தால் சுவையான மிளகு சட்னி தயார்.

Tags :
|
|
|