Advertisement

காரசாரமான மாவடு போடுவது எப்படி? தெரிந்து கொள்வோம் வாங்க

By: Nagaraj Fri, 24 Mar 2023 09:28:39 AM

காரசாரமான மாவடு போடுவது எப்படி? தெரிந்து கொள்வோம் வாங்க

சென்னை: காரசாரமான மாவடு போடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

தேவையானவை
மாவடு - 2 கிலோகல் உப்பு - 8:1மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்விளக்கெண்ணெய் (அல்லது) நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்கார பொடி - 3/4 கப்கடுகு பொடி - 1 கப்

flour,mustard powder,curry powder,rock salt,delicious ,மாவடு, கடுகுப்பொடி, காரப்பொடி, கல் உப்பு, சுவையானது

செய்முறை: காம்போடு கூடிய மாவடு தான் வடு மாங்காய்க்கு ஏற்றது. பெஸ்ட் சீசன் பிப்ரவரி கடைசி முதல் ஏப்ரல் வரை 15 தேதி வரை. பிறகு மாங்காய், மாம்பழம் வர ஆரம்பித்து மாவடும் பெரிய சைஸ், தொட்டால் அமுங்கும்படி கிடைக்கும். எனவே சீசன் ஆரம்பித்தவுடன் வாங்கி விடுவது நல்லது.

கீழே விழுந்து அடிபட்டது, வெம்பியது ஆகியவை சீக்கிரம் கெட்டுவிடும். எனவே நன்கு கெட்டியாக இருக்கும் மாவடுவாக வாங்கி தண்ணீர் விட்டு நன்கு அலம்பி காட்டன் துணியில் போட்டு ஈரம் போக துடைக்கவும்.

பிறகு ஈரம் இல்லாத பாத்திரத்தில் ஒரு கப் அல்லது டம்ளரால் அளந்து போடவும். அப்பொழுது தான் உப்பு கார பொடி போட சரியாக இருக்கும். கடுகு ஒரு கப் எடுத்து வாணலியில் பொரிக்க விட வேண்டாம், சூடு செய்து மிக்ஸியில் நன்கு பொடிக்கவும். தரமான காரப்பொடி, மஞ்சள் தூள் எல்லாம் உபயோகிக்கவும். ஒரு வருடம் ஆனாலும் கெடாது.

மாவடுவில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் விட்டு நன்கு குலுக்கவும். மாவடு சூடு. எனவே வயிறு சூடாகாமலும், வடுவில் பூச்சி புழு வராமல் இருக்கவும் விளக்கெண்ணெய் தடவுவது சிறந்தது. விளக்கெண்ணெய் பிடிக்காதவர்கள் நல்லெண்ணெய் உபயோகிக்கலாம்.

8கப் வடுவிற்கு ஒரு கப் கல் உப்பு, 3/4 கப் காரப்பொடி, 1 கப் கடுகு பொடி , நாலு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குலுக்கவும். நான்கு நாட்களுக்கு தினமும் காலை மாலை என கைப்படாமல் குலுக்கி விட நன்கு ஊறி வடு தண்ணீர் விட்டுக் கொள்ளும். ஏழு நாட்களில் மாவடு நன்கு சுருங்கி சாப்பிட ரெடியாகிவிடும்.

இதனை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் போட்டு பத்திரப்படுத்த ஒரு வருடம் ஆனாலும் கெடாது. எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பதை தவிர்க்கவும். உப்பு அரித்து பாத்திரம் ஓட்டை ஆகிவிடும். சுவையான மாவுடு தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ரெடி. மாவடு ஊறிய தண்ணீரையும் தோசை, இட்லிக்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

Tags :
|