Advertisement

சுக்கு காப்பியை வீட்டிலேயே எளிதில் செய்வது எப்படி?

By: Monisha Wed, 28 Oct 2020 10:16:06 AM

சுக்கு காப்பியை வீட்டிலேயே எளிதில் செய்வது எப்படி?

இருமல், ஜலதோஷம், சளி இருப்பவர்களுக்கு நல்ல நிவாரணத்தை கொடுக்கும் சுக்கு காப்பியை எப்படி வீட்டிலேயே எளிதில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சுக்கு சிறு துண்டு
நல்ல மிளகு 1 டேபிள் ஸ்பூன்
திப்பிலி 1/4 டேபிள் ஸ்பூன்
இலவங்கப்பட்டை சிறிது
ஏலக்காய் 2
கருப்பட்டி தேவைக்கு
தண்ணீர் 5 கப்

sukku coffee,jaggrey,pepper,health,colds ,சுக்கு காப்பி,கருப்பட்டி,மிளகு,ஆரோக்கியம்,சளி

செய்முறை
முதலில் நல்லமிளகு, சுக்கு, திப்பிலி ஏலக்காய் இதையெல்லாம் நன்றாக இடித்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் அதில் எல்லா பொருட்களையும் சேர்த்து விடுங்கள். எல்லா பொருள்களையும் சேர்த்த பிறகு ஒரு 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். 5 நிமிடத்தில் ஆவி பறக்கும் சுக்கு காப்பி தயார். மிகவும் எளிதாக இந்த ஆரோக்கிய பானத்தை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து குடித்து வரலாம். உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Tags :
|
|