Advertisement

சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி?

By: Monisha Mon, 27 July 2020 6:00:13 PM

சூப்பரான சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி?

இன்று நாம் சிக்கனை வைத்து சூப்பரான பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம்.

தேவையானப் பொருட்கள்
சிக்கன் துண்டுகள் - அரை கிலோ,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 6,
எண்ணெ‌ய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகு தூள் - தேவையான அளவு
கரம்மசாலா - தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தேங்காய் துருவல் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.

chicken podimas,recipe,onion,coconut,garam masala ,சிக்கன் பொடிமாஸ்,ரெசிபி,வெங்காயம்,தேங்காய்,கரம்மசாலா

செய்முறை
சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும். கொத்தமல்லி, ன்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து சூடு ஆறியதும் உதிர்த்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எ‌ண்ணெ‌ய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப,மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், உப்பு போட்டு வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும் தேங்காய்த் துருவல், கொத்தமல்லி தழை சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும். சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.

குறிப்பு: தேங்காய் துருவல் விருப்பம் இல்லாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.

Tags :
|
|