Advertisement

சூப்பர் ஸ்பெஷல் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி

By: Nagaraj Fri, 23 Dec 2022 09:16:17 AM

சூப்பர் ஸ்பெஷல் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி

சென்னை: ஸ்பெஷல் முருங்கைகாய் சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
கடுகு - = 1 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு = 1 டீஸ்பூன்சீரகம் - = 1 டீஸ்பூன்பெருங்காயத் தூள் = 1/2 டீஸ்பூன்எண்ணெய் - = 2டீஸ்பூன்வெங்காயம் = 1 தக்காளி = 3முருங்கை காய்,சின்ன வெங்காயம் = 10தண்ணீர் = 10/கப்மஞ்சள் தூள் = 1/2 டீஸ்பூன்துவரம் பருப்பு - = 100கிராம்புளிச்சாறு = 2 டேபிள்டீஸ்பூன்கொத்தமல்லி = சிறிது,பச்சை மிளகாய் = 2பூண்டு = 10சாம்பார் தூ,ள்- = 2டீஸ்பூன்மிளகாய் = 1டீஸ்பூன்நெய் = 2 டீஸ்பூன்

onions,green chillies,tomatoes,drumsticks,sambar powder ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்காய், சாம்பார் தூள்

வேகவைக்க வேண்டியவை: முதலில் குக்கரில் துவரம் பருப்பை நீரில் கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் பச்சை மிளகாய் - 2 வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

தாளிக்கும் முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு, தாளிக்கவும். சின்ன வெங்காயம்-10, பச்சை மிளகாய், தக்காளி வதக்கிக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள முருங்கை காய் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

பின்னர் உப்பு தூவிவிடவும் சாம்பார் தூள்-2 டீஸ்பூன், மிளகாய் -1டீஸ்பூன் சேர்த்து கிளறி, தண்ணீர், புளிச்சாறு சேர்த்து, மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும் பின் மூடியைத் திறந்து, பருப்பை மசித்து ஊற்றி ஒரு கொதி வந்ததும், ,நெய் -2 டீஸ்பூன் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான முருங்கை காய் சாம்பார் ரெடி.

Tags :
|