Advertisement

தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி ?

By: Karunakaran Fri, 18 Dec 2020 5:51:51 PM

தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி ?

தட்டை பயறுகளில் நார்ச்சத்து வளமையாக உள்ளதால், உடல் எடையை குறைக்க இது முக்கிய பங்கை வகிக்கிறது. இதில் வைட்டமின் ஏ போன்ற ஆண்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளதால், பல வகையான நோய்கள் அண்டாமல் தடுப்பதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் - 1
தட்டப்பயறு - 50 கிராம்
தக்காளி - 1
சிவப்பு குடைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு, மிளகுத்தூள் - சிறிதளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

tadpole,vegetable salad,veg recipes,salads ,தட்டப்பயறு, காய்கறி சாலட், வெஜ் ரெசிபி, சாலடுகள்

செய்முறை :

முதலில் தட்டப்பயறை வேக வைத்து கொள்ள வேண்டும். பின் வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின், ஒரு பாத்திரத்தில் தட்டப்பயறை போட்டு பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம். இப்போது சத்தான தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் தயார். இதனை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Tags :