Advertisement

மிகவும் சுவைமிகுந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யும் முறை

By: Nagaraj Sat, 03 Oct 2020 09:16:43 AM

மிகவும் சுவைமிகுந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை வீட்டிலேயே செய்யும் முறை

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது பால்கோவாவும் பெருமாளை உருகி காதலித்து அவரையே மணந்து கொண்ட ஆண்டாளும் தான்.

பாரம்பரிய முறையில் பால்கோவா புளியமர விறகுகளைக் கொண்டு பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டது. அதனால் தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போதும் கூட புளியமரத்தடி பால்கோவா என்றால் அவ்வளவு பிரசித்தம்.

இந்த பால்கோவாவை நம் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையானபொருட்கள்:

பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 5 மேஜைகரண்டி

bulgogi,sugar,flavor,ghee,gourd ,பால்கோவா, சர்க்கரை, சுவை, நெய், கோவாபதம்

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் முழு கொழுப்புள்ள ஒரு லிட்டர் பாலை எடுத்துசுண்டக் காய்ச்சவும். பால் பொங்கி வரும் போது, மிதமான தீயில் பாலை நன்றாக காய்ச்சவும். இதற்கு சுமார் 30 நிமிடங்கள் ஆகவேண்டும்.

பால் பாதியாகும் வரை காய்ச்சி விட்டு சர்க்கரை சேர்த்து (சுவைக்கேற்ப மேலும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்) அடி பிடிக்காமல் கிளறவும். அடிக்கடி சிறிது நெய் சேர்த்து கிளறிக் கொண்டே இருங்கள். பாலை சிறிது நேரம் காய்ச்சிய பின்பு கோவா பதத்திற்கு பாத்திரத்திலிருந்து ஒட்டாமல் வந்தவுடன் ஏலக்காயை பொடித்து சேர்க்கவும். மேலும் சுவையூட்ட குங்குமப்பூ சேர்த்துகொள்ளலாம். சுவையான பால்கோவா தயார்.

Tags :
|
|
|