Advertisement

அனைவருக்கு பிடித்த வெனிலா ஐஸ்க்ரீம் எப்படிச் செய்வது?

By: Monisha Fri, 12 June 2020 3:37:26 PM

அனைவருக்கு பிடித்த வெனிலா ஐஸ்க்ரீம் எப்படிச் செய்வது?

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம்.

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
பால் – 1 கப்,
சர்க்கரை – 3/4 கப்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.

vanilla ice cream,fresh cream,milk,vanilla essence,sugar ,வெனிலா ஐஸ்க்ரீம்,ஃப்ரெஷ் க்ரீம்,பால்,வெனிலா எசென்ஸ்,சர்க்கரை

எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் எசென்ஸ், பால் சேர்த்து நன்கு வைப்பரால் கலக்கவும். ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்பு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். இப்போது அனைவருக்கு பிடித்த வெனிலா ஐஸ்க்ரீம் ரெடி

Tags :
|