Advertisement

வெஜ் மிக்ஸ் சாலட் செய்வது எப்படி ?

By: Karunakaran Tue, 17 Nov 2020 7:54:38 PM

வெஜ் மிக்ஸ் சாலட் செய்வது எப்படி ?

பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. தொற்று நோய்க்கு எதிர்பான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.

தேவையான பொருட்கள்
பசலைக்கீரை - 200 கிராம்,
காளான் - 100 கிராம் ,
வெங்காயம் - 1 பெரிய,
தேங்காய் எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி,
முட்டைகோஸ் - 100 கிராம் ,
கேரட் - 1,
சீரகம் - 1 தேக்கரண்டி ,
மிளகாய் - 2,
சோம்பு - 1 தேக்கரண்டி ,
குடைமிளகாய் - 1
உப்பும், இஞ்சியும் - தேவைக்கு ஏற்ப

palak,veg mix salad,vegetables,nutrition ,பசலைக்கீரை, வெஜ் மிக்ஸ் சாலட், காய்கறிகள், ஊட்டச்சத்து

செய்முறை:

முதலில் காய்களையும், கீரையையும் நறுக்கிக்கொள்ள வேண்டும். பின் இஞ்சியை அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி விழுதை கொட்டி வதக்கி, அத்துடன் மிளகாயை நறுக்கிப்போட்டு, சீரகம், சோம்பு போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், காளான் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டிக் கிளற வேண்டும். பசலைக் கீரையையும், உப்பையும் சேருங்கள். சிறிதளவு தண்ணீர் விட்டு கீரை, காய்கறிகளை வேகவிட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான பசலைக்கீரை வெஜ் மிக்ஸ் தயார்.

Tags :
|