Advertisement

எளிய முறையில் வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி ?

By: Karunakaran Thu, 10 Dec 2020 4:38:33 PM

எளிய முறையில் வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி ?

குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 100 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கப்
கேரட் - 20 கிராம்
பீன்ஸ் - 20 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
தேவையான அளவு - உப்பு
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு

veg paneer fried rice,paneer,fried rice,veg recipe ,Veg Paneer Breed Rice, Paneer, Breed Rice, Veg Recipe

செய்முறை :

முதலில் பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்க வேண்டும். பின் பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன்பின், கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை வதக்க வேண்டும். அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கடைசியாக வடித்த சாதம் சேர்த்து நன்கு கலந்து வெங்காய தாள் தூவி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாற சுவையான வெஜ் பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.

Tags :
|